அம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போகிறது என்ற வெறும் வதந்திக்கே தெருவுக்கு வந்து, பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், வடக்கில் கேப்பாவுலவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வரும் அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்களைப் பற்றி கேட்டு அறிய வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அம்பாந்தோட்டையில் காணிக்காகப் போராடிய சிங்கள மக்கள் கேப்பாபுலவு தமிழ் மக்களை அறிய வேண்டும்: மனோ கணேசன்

அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான தடைகளை இலங்கை அரசாங்கம் கடக்கும் வரையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலர்களை முதலிடுவதிலிருந்து ஒதுங்கியிருக்க (அல்லது அதனை ஒத்திவைக்க) சீனா தீர்மானித்துள்ளது. 

Read more: அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைக்க சீனா தீர்மானம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட தரப்புக்களுடன் ஏற்கனவே இரு தடவைகள் பேசியுள்ள நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, அடுத்த கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேசிப் பயனில்லை; ஜனாதிபதியுடன் பேசத் தீர்மானம்: இரா.சம்பந்தன்

கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகளை வழங்குவது அர்த்தமற்றது, உடன்பாடில்லாதது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: பொறுப்புக்கூறலுக்காக இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் வழங்குவதில் உடன்பாடில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரிச் சென்று நாவுறு- பப்புவா நியுகினி தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வழக்குகளை எதிர்நோக்காமல் மீண்டும் தாய்நாடு திரும்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: நாவுறு தீவுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும்: ரணில் விக்ரமசிங்க

தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 16 நாட்களாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் போராடி வருகின்ற நிலையில், குறித்த போராட்டம் அர்த்தமற்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் அர்த்தமற்றது: ராஜித சேனாரத்ன

போர்க்குற்ற நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பில் பேசினால், புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது போகலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Read more: போர்க்குற்ற நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பில் பேசினால், புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது: சந்திரிக்கா குமாரதுங்க

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்