ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகள், புதிய கூட்டணி அமைப்பதற்காக ஆகஸ்ட் 05ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணி ஆகஸ்ட் 05ஆம் திகதி கைச்சாத்து!

“யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ். மாநகர எல்லைக்குள் 5G (ஐந்தாம் தலைமுறை ஒலிக்கற்றைக்) கம்பங்களை நாட்டுவதற்கு தீர்மானித்து மக்களின் எதிர்ப்புகளைக் கணக்கிலெடுக்காமல் நடைமுறைப்படுத்த முனைகின்றார். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையைக் கைவிட்டு யாழ். மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார். 

Read more: யாழ். மேயர் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்; சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்புக் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில் பங்கேற்கவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியுடனான சந்திப்புக்கு சம்பந்தருக்கு அழைப்பு இல்லை; அதனால் புறக்கணித்தோம்: த.தே.கூ அறிவிப்பு!

இனவாதத்தை தூண்டும் எந்த சக்திகளையும் ஆதரிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதத்தைத் தூண்டும் சக்திகளை ஆதரிக்க முடியாது: சஜித் பிரேமதாச

‘இனங்களுக்கு இடையில் புரந்துணர்வை ஏற்படுத்த வெவ்வேறு மொழிகளைப் பேசும் திறன் முக்கியமானது. அவ்வாறான நிலையில், தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது என்னிடமுள்ள பெரும் குறை’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது என்னிடமுள்ள பெரும் குறை: ரணில்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய சில தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததை பெரிது படுத்த வேண்டாம்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதியுடனான சந்திப்பில் த.தே.கூ.வினர் கலந்து கொள்ளாததை பெரிதுபடுத்த வேண்டாம்: மனோ கணேசன்

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

Read more: வேள்வித் தடை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இரத்து!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்