யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரையும், செயலாளரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். 

Read more: யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டுள்ளது. 

Read more: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கும், செயலாளருக்கும் விளக்கமறியல்!

நாடு முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை, எந்த வகையிலும் தளர்த்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார். 

Read more: பாதுகாப்பை தளர்த்த வேண்டாம்: ரணில்

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்கிற்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் தெற்கிலிருந்து வடக்கிற்குள் நுழைவு; பாதுகாப்புத் தரப்பு எச்சரிக்கை!

“நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, வடக்கு- கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது. உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டு நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி வடக்கு- கிழக்கில் இராணுவத்தைக் குவிக்க முயற்சி: மாவை சேனாதிராஜா

கடந்த பத்து வருடங்களாக சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும், தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கக் காரணமாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமையே பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணம்: இராணுவத் தளபதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சோதனைகளில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் புகைப்படங்கள் மற்றும் தொலைநோக்கு கருவி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Read more: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும், செயலாளரும் கைது!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்