“நாங்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே தென்னிலங்கை கட்சிகளிற்கு சவாலாக இருக்க முடியும். இல்லையெனின், எங்களுடைய நடைமுறைகளை பார்த்தால் பிரித்தாளும் தந்திரங்களை கையாளும் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதமாக மேற்கொள்ளும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: நாங்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே தென்னிலங்கைக்கு சவாலாக இருக்க முடியும்: செல்வம் அடைக்கலநாதன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இருக்கின்ற முரண்பாடுகள் காரணமாக மக்கள் வெறுப்படைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி- பிரதமர் மீது மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்: மனோ கணேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தூரநோக்கற்று செயற்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: கூட்டமைப்பின் தலைமை தூரநோக்கற்று செயற்படுகின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார். 

Read more: ரணில்- ராகுல் சந்திப்பு!

சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நாங்கள் செய்த பாவம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நாங்கள் செய்த பாவம்: மாவை சேனாதிராஜா

இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘றோ’வினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்கு, தமக்கு வாய்ப்பளிக்குமாறு இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர், இலங்கை அரசாங்கத்திடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். 

Read more: ஜனாதிபதி படுகொலை முயற்சி; இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை நடத்த முயற்சி!

“புதிய சட்டம் தற்போது இருக்கிற நிலையிலேயே இயற்றப்படுவதை நாம் தோற்கடிப்போமானால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது. அதன் பின் அதை நீக்க அழுத்தம் கொடுக்குமாறு நாம் கோரவும் முடியாது. ‘இயலுமானதை வென்றெடுப்பதுதான் அரசியல் கலை’, ‘உள்ள தெரிவுகளில் குறைவான தீமையை தெரிந்தெடுத்தல்’ என்பனவே இங்கு பொருத்தமான கோட்பாடுகளாக அமையும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: இயலுமானதை வென்றெடுப்பதுதான் அரசியல் கலை; பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பிலான கேள்விக்கு எம்.ஏ.சுமந்திரன் பதில்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்