“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமல்ல யாராக இருந்தாலும் அமைச்சரவையைக் கூட்டாதது தவறுதான். ஆனால், அதற்காக உரிய நேரத்தில் கடமைகளை செய்திருக்க வேண்டிய அரச அதிகாரிகள் ஜனாதிபதி மீது மாத்திரம் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி அமைச்சரவையைக் கூட்டாதது தவறு: துமிந்த திசாநாயக்க

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரானுடன், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் நான் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டேன். அவர் மரணித்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். 

Read more: சஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்தேன்; அவர் மரணித்ததற்காக மகிழ்ந்தேன்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

‘அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள்.’ என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

Read more: அரசியலமைப்பை மீறிச் செயற்படுகிறீர்; மைத்திரிக்கு ரணில் கடிதம்!

“அரச இயந்திரத்தை அரச தலைவரான ஜனாதிபதியே செயலிழக்க செய்ய அனுமதிக்க முடியாது. பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை புறக்கணிப்பது, அரசியலமைப்புக்கு முரணானதும் தான்தோன்றித்தனமானதுமாகும்.” என்று அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: அரச இயந்திரத்தை ஜனாதிபதி செயலிழக்கச் செய்வதை அனுமதிக்க முடியாது: சம்பிக்க ரணவக்க

“எமது பாதுகாப்பை நாங்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். பொலிஸோ, இராணுவமோ பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை முழுமையான உறுதிப்படுத்தாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: எமது பாதுகாப்பை நாங்களே உறுதிப்படுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

அமைச்சரவைக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம்!

இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் பொதுச் சட்டத்தின் கீழ் இன வேறுபாடுகளின்றி சமமாக நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு வலியுறுத்தியுள்ளது. 

Read more: இலங்கையில் அனைவரும் இன வேறுபாடின்றி சமமாக நடத்தப்பட வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியக் குழு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்