“முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசமப் பிரசாரங்களை மேற்கொண்ட இனவாதக் கும்பல்கள் இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பக்கம் சங்கமித்திருக்கின்றன. முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைப்பதற்கு எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளனர். சுயகெளரவமுள்ள நாங்கள் இந்த அணியை முற்றாக நிராகரிக்க வேண்டும். என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதக் கும்பல்கள் பொதுஜன பெரமுனவோடு சங்கமம்: ரவூப் ஹக்கீம்

“மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு, நாம் அமைக்கவுள்ள ஆட்சியில் தீர்வு காண்போம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த ஆட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்: கோட்டா

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவுக்குழுவின் தலைரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். 

Read more: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை 24ஆம் திகதிக்கு முன்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையே நான்காவது தடவையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. 

Read more: ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு நேற்றும் எட்டப்படவில்லை!

‘இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ்த் தேசத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் மரபுவழி தாயகம் என்பதையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து , தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பொது உடன்பாட்டின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Read more: தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டும்; தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே பொது உடன்படிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நேரடி ஒப்பந்தமொன்று எதிர்வரும் 19ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது. 

Read more: கோட்டா- சுதந்திரக் கட்சி இடையே நேரடி ஒப்பந்தம்; 19ஆம் திகதி கைச்சாத்து!

வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்றாத நிலையில், அக்கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்பதற்கு வடக்கு அரசியல்வாதிகளுக்கு முடியாமல் போயுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (மக்கள் விடுதலை முன்னணி) ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: வாக்குறுதியை வழங்கி ஏமாற்றியவர்கள் வடக்கு மக்களிடம் வாக்கு கேட்க முடியாமல் திண்டாட்டம்: அநுர

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்