“எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெரும் அனுபவத்தைக் கொண்ட அரசியல்வாதி. பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் கடமையாற்றிய அவர் மக்களின் தேவைகளை அறிந்தவர். கோட்டாபய ராஜபக்ஷ எவ்வித அனுபவும் இல்லாதவர். அவரிடம் நாட்டை ஆட்சிபுரிய கொடுத்தால் நாட்டை சீரழித்துவிடுவார்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டா நாட்டை சீரழித்துவிடுவார்: ரணில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று திங்கட்கிழமை தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளார். 

Read more: செல்வம், சித்தார்த்தனுடன் ரணில் அவசரப் பேச்சு; ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட கோரிக்கை!

“தமிழ் மக்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ்த் தலைமைகள் தமது சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டுவிட்டார்கள்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

Read more: சுய இலாப அரசியலுக்காக தமிழ்த் தலைமைகள் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டனர்: டக்ளஸ் தேவானந்தா

அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: சமூக நீதி அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்: அநுர

“ராஜபக்ஷக்களினால்தான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால், ராஜபக்ஷக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்கள் தங்களைப் பாதுகாக்கவே ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்: ரவூப் ஹக்கீம்

“சஜித் பிரேமதாச வடக்கிலுள்ள எந்தக் கட்சியுடனும் வெளிப்படையாகவோ, இரகசியமாகவோ ஒப்பந்தங்கள் எதனையும் செய்துகொள்ளவில்லை” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: சஜித் வடக்கிலுள்ள கட்சிகளுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை: ரணில்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்