தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறானது: இரா.சம்பந்தன்

“இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள்? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: இன ரீதியான பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா?, இரா.சம்பந்தன் கேள்வி!

இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்கள் தேசிய தவ்ஹீத் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பைப் பேணிய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பைப் பேணிய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

“பாதுகாப்புத் தரப்பினர் மீது குற்றங்களைச் சுமத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளை இனியாவது அரசாங்கம் கைவிட்டு, தேசிய பாதுகாப்புத் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான முழுமையான ஒத்துழைப்பை எதிர்க்கட்சி அரசாங்கத்துக்கு வழங்கும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பாதுகாப்புத் தரப்பை குற்றஞ்சாட்டாது, தேசிய பாதுகாப்பில் அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

“நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல்வாதிகளும், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளும் களியாட்ட மனோநிலையில் இருந்தமையாலேயே நாம் இன்றைக்கு மோசமான நிலையை எதிர்நோக்கியுள்ளோம். மிலேச்சத்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ள தீவிரவாத அமைப்பு ஓரிரு வருடங்களில் உருவாகியிருக்க முடியாது. ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னர் இதன் செயற்பாடுகள் ஆரம்பித்திருக்க வேண்டும். எனவே கடந்த பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: தீவிரவாதத் தாக்குதல்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பதவியிலிருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும்: சரத் பொன்சேகா

நாடு எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்குவதற்கு அமைச்சரவையில் கருத்தொன்று எழுந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: பாதுகாப்பு அமைச்சராகிறார் சரத் பொன்சேகா?

“அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதேபோன்று எதிர்வரும் ஒருவார காலப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அனைத்துப் பாதுகாப்பு துறைகளும் முற்றாக மறுசீரமைக்கப்படும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பதவிகளில் உடனடியாக மாற்றம்: மைத்திரி

More Articles ...

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.