“நாட்டில் இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். அத்தோடு, ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தெரிவாகும் நிலை காணப்படுகின்றது.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

Read more: ஆறு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல்: லக்ஷ்மன் யாப்பா

“இலங்கை அரசாங்கம் மக்களுக்கு என்ன சொல்கிறதோ, அதனையே சர்வதேச சமூகத்திற்கும் சொல்லவேண்டும். சர்வதேச சமூகத்திற்கு ஒரு கதையும், நாட்டு மக்களுக்கு இன்னொரு கதையும் கூறக் கூடாது. அதாவது தங்களால் என்ன செய்ய முடியுமோ அதனையே கூறவேண்டும். செய்ய முடியாத ஒன்றைக் கூறக்கூடாது.” என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு ஒரு கதையும், நாட்டு மக்களுக்கு இன்னொரு கதையும் சொல்லக் கூடாது: சுரேன் ராகவன்

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, “சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்பட்டன. அவற்றைத் எங்களுக்குக் காண்பித்தார்.” என்று தெரிவித்துள்ளார். 

Read more: இறுதி மோதல்களில் சரணடைந்த போராளிகளின் முழுமையான விபரம் மஹிந்தவிடம் இருந்தது: மாவை சேனாதிராஜா

“எதிர்வரும் காலங்களில் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும், குறிப்பாகக் கொழும்பிலும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன. நல்ல முடிவுகளை உரிய வேளையில் எடுப்போம்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: கொழும்பில் போட்டியிடுவது குறித்து கூட்டமைப்பு ஆராய்கிறது: மாவை சேனாதிராஜா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்லப்போவதாகக் கூறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேவையற்ற குழப்பத்தை நாட்டில் ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது: மஹிந்த சமரசிங்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்துவது தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்துவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை: மஹிந்த

தலைமன்னாருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: தலைமன்னார்- தமிழக கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்: சாள்ஸ் நிர்மலநாதன்

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது.” என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.