ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கட்சியின் நோக்கம் என்று சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது இலக்கு: அங்கஜன் இராமநாதன்

“சுத்தமானதும், பாதுகாப்பானதுமான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்தை 2030ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். அதற்கு எமது அமைச்சு மட்டுமல்லாது, நீர்ப்பாசன திணைக்களம், மகாவலி அதிகார சபை, வனபாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்பும் அவசியமானது.“ என்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: 2030ஆம் ஆண்டளவில் சுத்தமான குடிநீர் விநியோகம் இருமடங்காக அதிகரிக்கப்படும்: ரவூப் ஹக்கீம்

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு. ஆனால், அதற்கு உடனடியாகச் சாத்தியமில்லை. ஆகவே அதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதே எமது விருப்பம்: எம்.ஏ.சுமந்திரன்

“கொலைகாரர்கள் இராணுவ, மத சீருடை அணிவதால் தப்பக்கூடாது. இந்த முட்டாள் சிந்தனையாலேயே தமிழருக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்கவில்லை.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: கொலைகாரர்கள் இராணுவ சீருடை அணிவதால் போர் நாயகர்களாக முடியாது: மனோ கணேசன்

“தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். இந்தக் கோரிக்கையினை தற்போதைய ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்தன அவதானமெடுத்து செயற்படுவார் என நினைக்கின்றேன். அவரும் ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் அவர் இதனைப் புரிந்து கொள்வார் என நம்புகின்றேன்.” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களுக்காகச் செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், போர்க்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்த இலங்கையை பிணையெடுப்பதற்கு முயற்சிப்பதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.  

Read more: இலங்கையை போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து பிணையெடுக்க கூட்டமைப்பு முயற்சி: அனந்தி சசிதரன்

எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: 27 மருந்துப் பொருட்களின் விலை விரைவில் குறைப்பு: ராஜித சேனாரத்ன

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருக்கின்றோம்.” என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

“முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் எனது ஆட்சிக் காலத்திலும் இருந்தனர். ஆனால், அனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழ வைப்பதே எமது இலக்கு.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.