நாட்டில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தாக்குதல்தாரிகளால் எதிர்வரும் நாட்களில், தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Read more: குண்டுத் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படலாம்: பொலிஸ் தலைமையகம்

நாட்டில் இன்று இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதியை தரும் உண்மையாகும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதத்திற்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதி: மனோ கணேசன்

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரும் முகமாக நாளை செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

Read more: நாளை தேசிய துக்க தினம்; இன்று இரவு 08 மணி முதல் நாளை அதிகாலை 04 மணி வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் எட்டுப் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read more: தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இதுவரை 24 பேர் கைது!

தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என 17 நாட்களுக்கு முன்னரே சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் முன்வைத்த எச்சரிக்கையை உயர்மட்ட பாதுகாப்புத் தரப்பினர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பாரிய நாசகார செயற்பாட்டைத் தவிர்த்திருக்க முடியும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அறிவுறுத்திய புலனாய்வு அறிக்கையை மதித்திருந்தால் உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம்: ராஜித சேனாரத்ன

குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரில் நச்சுப்பொருள் கலக்கப்பட்டுள்ளதாக பரவிய செய்தி பொய்யானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Read more: குடிநீரில் நச்சுப்பொருள் கலக்கப்பட்டதாக பரவிய செய்தி பொய்யானது: பொலிஸ்

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயணத்தினை இடைநடுவில் இரத்து செய்து கொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார். 

Read more: மைத்திரி நாடு திரும்பினார்; இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.