“இராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டும், அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டும் பொருளாதார விருத்தி பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அரசாங்கம் பிரஸ்தாபிக்கும் போது நுண்ணறிவுள்ள தமிழர்கள் யாவரும் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ‘சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்’ என்று ஆகிவிடும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் இராணுவத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுவது அபத்தமானது: சி.வி.விக்னேஸ்வரன்

‘குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Read more: குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்த வலியுறுத்த வேண்டும்: ஜெனீவாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் யோசனையொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளிக்கவுள்ளனர். 

Read more: பிரதமருக்கு ஆதரவான பிரேரணையில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்து!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Read more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஏப்ரல் 04ஆம் திகதி விவாதம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுககும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

Read more: ரணில்- சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 

Read more: ‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்!

“நிலைபேறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கையால் மிகக்குறைந்த அளவிலான முன்னேற்றமே பெறப்பட்டுள்ளது. 30/1 தீர்மானத்தின் கீழ், நிலைபேறுகால நீதிப் பொறிமுறைக்காக இலங்கை வழங்கிய அர்ப்பணிப்பு, குறிப்பிடத்தக்க முடிவுகளோ அல்லது பொது வெளியில் கிடைக்கும் சட்டமூல வரைவுகளோ இல்லாத நிலையில், சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Read more: நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில் இலங்கை மந்தமாகச் செயற்படுகிறது; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் விமர்சனம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்