“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், இலங்கை அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Read more: கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டி.பி.ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். 

Read more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இராஜாங்க அமைச்சர் கையெழுத்து!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார். 

Read more: இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சுமந்திரன் அமெரிக்கா பயணம்!

“இலங்கையிலுள்ள தமிழ் மக்களாகிய நாம் தற்போதும் அச்சுறுத்தலுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் கூடாது; ஜெனீவாவில் அனந்தி சசிதரன் கோரிக்கை!

நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். 

Read more: அவசர கால நிலைமை நீக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையான நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை அரசாங்கம் தவறியிருக்கின்ற நிலையில், அதனை செய்விப்பதற்கான மாற்று வழிகளுக்கு அமெரிக்கா தலைமையேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Read more: ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு அமெரிக்கா புதிய வழிகளில் வழங்க வேண்டும்: த.தே.கூ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பானுக்கான உத்திரயோகப்பூர்வ விஜயத்தில் அவருடன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளில், கலகொட அத்தே ஞானசார தேரர் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Read more: மைத்திரியோடு ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்லவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்