“தன்னுடைய பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கேட்க முயலுவாராயின், அது சுத்த பைத்தியக்கரத்தனமான நடவடிக்கையாகவே இருக்கும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடி மூக்குடைபட வேண்டாம்; மைத்திரிக்கு சுமந்திரன் அறிவுரை!

“எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை கூட்டு எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றால், கோட்டாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும்.” என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷவே சவால் விடும் எதிரணி வேட்பாளராக இருப்பார்: மனோ கணேசன்

மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நோக்கில், 3 நாடுகளிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

Read more: பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளிடம் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

“தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. முன்னர் தமிழ் மக்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது.” என்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களைக் கைது செய்யும் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை யாரும் தவறாக நோக்கவில்லை: நீதிவான் ரங்க திஸாநாயக்க

‘கடன்களுக்கான வட்டி வீதத்தை 200 அடிமானப்புள்ளி (Basis Point) குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடன்களைப் பெறுவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும்: ரணில்

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டுடனா? அல்லது 2020ஆம் ஆண்டிலா? முடிவுக்கு வருகின்றது என்பது தொடர்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. 

Read more: மைத்திரியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆலோசனை கோர சுதந்திரக் கட்சி முடிவு!

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியல் இராஜதந்திர சூழ்ச்சியினையே தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையிலெடுத்துள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

Read more: ஜே.ஆரின் இராஜதந்திர சூழ்ச்சியை ரணில் கையிலெடுத்துள்ளார்: டளஸ் அழகப்பெரும

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.