இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘றோ’வினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான முயற்சியொன்று எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்கு, தமக்கு வாய்ப்பளிக்குமாறு இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர், இலங்கை அரசாங்கத்திடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். 

Read more: ஜனாதிபதி படுகொலை முயற்சி; இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை நடத்த முயற்சி!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார். 

Read more: ரணில்- ராகுல் சந்திப்பு!

கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட இந்தியாவுடனான நட்புறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் யார் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: இந்தியாவுடனான நட்புறவை சீர்குலைக்க முயற்சி: மஹிந்த சமரசிங்க

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. பொலிஸாரின் விசாரணைகள் மீது எமக்கு நம்பிக்கை உள்ள போதும், அரசியல் மற்றும் சமூக நோக்கங்களுக்காக இந்த சதி முயற்சி விவகாரத்தை சிலர் மூடி மறைப்பதற்கு முயல்கின்றனர்.” என்று ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

Read more: ஜனாதிபதி மீதான கொலைச் சதியை மூடி மறைக்க முயற்சி: ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குற்றச்சாட்டு!

“புதிய சட்டம் தற்போது இருக்கிற நிலையிலேயே இயற்றப்படுவதை நாம் தோற்கடிப்போமானால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது. அதன் பின் அதை நீக்க அழுத்தம் கொடுக்குமாறு நாம் கோரவும் முடியாது. ‘இயலுமானதை வென்றெடுப்பதுதான் அரசியல் கலை’, ‘உள்ள தெரிவுகளில் குறைவான தீமையை தெரிந்தெடுத்தல்’ என்பனவே இங்கு பொருத்தமான கோட்பாடுகளாக அமையும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: இயலுமானதை வென்றெடுப்பதுதான் அரசியல் கலை; பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பிலான கேள்விக்கு எம்.ஏ.சுமந்திரன் பதில்!

அரசாங்கத்திற்குள் நீடித்து வரும் குழப்பத்தின் காரணமாக நாட்டு மக்கள் இழப்பீடு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அரசுக்குள் நீடிக்கும் குழப்பத்தால் நாட்டு மக்கள் இழப்பீடு செலுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நாளை மறுதினம் சனிக்கிழமை (20 ஆம் திகதி) புதுடில்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. 

Read more: ரணில்- மோடிக்கு இடையில் வரும் 20ஆம் திகதி சந்திப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்