கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

Read more: க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைக்க தீர்மானம்!

இலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது.

Read more: இலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகம்

“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் வாடிவிட்டனர். எனவே, குற்றம் புரிந்தார்களோ, புரியவில்லையோ அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் கைதிகள் மீது பாயக்கூடாது: இரா.சம்பந்தன்

யுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: யுத்தப் பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் மைத்திரியுடன் பேசவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் நீடித்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முன்னர், அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

Read more: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு முன் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்: ரவூப் ஹக்கீம்

“வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை. அத்தோடு, பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும், வடக்கு மாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை வழங்குவதில்லை.” என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: வடக்கு அபிவிருத்திக்கு மாகாண சபையும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை: மனோ கணேசன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்