உயிர்த்த ஞாயிறு தினத்தற்கு நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இலங்கைக்கு சீன நாட்டவர்கள் சுற்றுலாவுக்கென விஜயம் செய்வதில் சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தயாராக இருக்கிறேன்: தம்மிக்க பெரேரா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவக் கெடுபிடி அதிகரிப்பு; ஜனாதிபதியிடம் டக்ளஸ் எடுத்துரைப்பு!
யாழ்ப்பாணத்தில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை இலக்கு வைத்தே வன்முறைகள் தோற்றுவிக்கப்படுகின்றன: சஜித் பிரேமதாச
“நாட்டுக்கு தீ வைத்து அழித்துவிட்டு அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று வன்முறைகளை ஏற்படுத்தும் அரசியல் சூதாட்டம் இடம்பெற்று வருகின்றது.” என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்: வீ.இராதாகிருஷ்ணன்
“ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சரியா, பிழையா என்பதைக் காட்டிலும், அது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடைய மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அதேபோல இலங்கையில் இருக்கின்ற வடக்கு- கிழக்கு, மலையகம் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஞானசாரவை விடுதலை செய்த ஜனாதிபதிக்கு, சிறையிலுள்ள தமிழ் இளைஞர்கள் கண்ணுக்கு தெரியவில்லை: மாவை குற்றச்சாட்டு!
“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பல வருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை கண்ணுக்கு தெரியவில்லையா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கை மீதான பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கை மீது விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.