தற்போதைய ஆட்சியில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என தமிழ் மக்கள் எதிர் பார்க்கக் கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்புத் திட்டம் குறித்த கருத்துப் பகிர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Read more: புதிய அரசியல் அமைப்பு சிறந்த தீர்வு - அனுரகுமார திசாநாயக

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சி பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது: எம்.ஏ.சுமந்திரன்

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் கிடைக்கும் அரச சுகபோகங்களை எதிர்பார்த்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப் பெறுகின்ற சலுகைகள் இல்லாமலே பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக செயற்படுவேன்.” என்று எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: சலுகைகளைப் பெறாமலேயே பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவேன்: மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ அணியுடன் இணைந்து கூட்டணியாக பயணிப்பதாகவும், அடுத்த பிரதான தேர்தல்களை எதிர்கொள்ள முன்னர் கூட்டணியை அமைக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதுடன் கூட்டணியை அமைக்கும் பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவிடம் வழங்கியுள்ளார். 

Read more: மஹிந்த அணியுடன் கூட்டணி அமைக்க சுதந்திரக் கட்சிக்கு மைத்திரி பணிப்பு!

“தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமைப் பதவியை ஏற்கும் பட்சத்தில், அவருடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளளோம்.” என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

Read more: தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியை விக்னேஸ்வரன் ஏற்க வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருவரும் தங்களது காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.” என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: நிரந்தரத் தீர்வை நோக்கியே பிரபாகரன் செயற்பட்டார்; சம்பந்தனும் செயற்படுகின்றார்: சி.வி.கே.சிவஞானம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது கோரியதாகத் தெரியவருகிறது. 

Read more: எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்தவை ஏற்க வேண்டும்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கோரிக்கை!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

ஒன்பதாவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.