நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், இன்று திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. 

Read more: ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

Read more: மைத்திரி- பஷிலுக்கு இடையில் முக்கிய பேச்சு!

“எமது நாட்டின் அரசியலமைப்பின்படி, இறையாண்மை என்பது, மக்களிடமே உள்ளது; பாராளுமன்றத்திடம் இல்லை. மக்கள் தமது இறையாண்மையை வெளிப்படுத்தக்கூடிய வழி, வாக்களிப்பு மூலமே ஆகும். ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும், இவ்விடயங்கள் குறித்துக் கவனமாக ஆராயுமாறு வேண்டுகிறேன்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டின் இறையாண்மை மக்களிடமே உள்ளது; பாராளுமன்றத்திடம் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

“நான் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் எனக்கு உயிராபத்து இருப்பதாக தெரிவித்த கருத்துக்கள், வெறுமனே அரசியல் பேச்சுகளாகும். எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாக உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகியிருக்கவில்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷவினால் கொலை அச்சுறுத்தல்; அது தேர்தலுக்காக பேசியது: மைத்திரி

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின், இராணுவத்தினரும் பொலிஸாரும், வீதிகளில் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைத்துச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

Read more: இராணுவமும் பொலிஸூம் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைக்க நேரிடும்; யாழ். கட்டளைத் தளபதி அச்சுறுத்தல்!

தமிழ் மக்கள் சகல உரித்துகளுடனும், சமஷ்டி முறையிலான அரசியல் கட்டமைப்பொன்றின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்கள் சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

Read more: ஜனாதிபதி- ஐ.தே.மு.வுக்கு இடையில் இன்றும் சந்திப்பு!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.