“எமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அரசாங்கம் இவற்றினை நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் தமிழ் மக்கள் ஒருபோதும் இந்நாட்டில் இரண்டாந்தர குடிமக்களாக வாழ மாட்டார்கள்.” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப்பிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்கள் ஒருபோதும் இரண்டாந்தர குடிமக்களாக வாழமாட்டார்: இரா.சம்பந்தன்

“வடக்கில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும், மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து இராஜினாமா செய்துள்ளேன்.” என்று முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: மக்களுக்காக பதவி துறந்ததை எண்ணி பெருமை கொள்கின்றேன்: விஜயகலா மகேஸ்வரன்

“ராஜபக்ஷாக்கள் என்பவர்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பவர்கள். அவர்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது.” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்களுக்கு இடையே பிளவுகள் இல்லை: கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரான ஒஸ்டின் பெர்ணான்டோ, தன்னுடைய பதவியை சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) இராஜினாமாச் செய்துள்ளார். 

Read more: ஒஸ்டின் பெர்ணான்டோ இராஜினாமா!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Read more: விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா?

தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

Read more: மாவை சேனாதிராஜாவே எமது அடுத்த முதலமைச்சர்: சி.வி.கே.சிவஞானம்

இலங்கையில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையில் நீதி மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் மந்தம்; புதிய அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்