மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை முன்வைத்து எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். 

Read more: பிணைமுறி விவகாரம்; பெப்ரவரி 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம்!

“புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும், சமஷ்டி முறையிலான ஆட்சி முறை இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: சமஷ்டி என்கிற சொல் இல்லாவிடினும் அதையொத்த ஆட்சி முறை வேண்டும்: இரா.சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கட்டுநாயக்கவில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தேசிய அரசியல் நோக்கம் அற்ற குடும்ப அரசாங்கம் ஒன்றை தாபிக்கும் கட்சியை ஆட்சிக்கு இந்நாட்டு மக்கள் இனியொரு முறை இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Read more: இலங்கையில் இனியொரு முறை குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : ஜனாதிபதி

 

இலங்கையில் கைப்பற்றப் பட்ட 1000 கோடி பெறுமதியான 928 Kg கொக்கேயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அழிக்கப் பட்டது.

Read more: 1000 கோடி பெறுமதியான கொக்கேயின் ஜனாதிபதி முன்னிலையில் அழிப்பு

யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை நகரில் பாழடைந்த வயல் கிணறொன்றில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை போலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப் பட்ட ஆயுதங்களில் ரி.56 வகை துப்பாக்கிகள் மற்றும் குண்டும், மோட்டார் குண்டுகளும் ஆர் பீ ஜி குண்டு ஒன்று மற்றும் ராக்கெட்டு லாஞ்சர் வகை சார்ந்த குண்டுகளும் அடங்குவதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Read more: யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

தமது நல்லாட்சி அரசின் செயற்பாட்டாலும், வேலைத் திட்டங்களாலும் 3 வருடங்களில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சி வீதம் 5.5% வீதத்தால் அதிகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையின் பொருளாதார நிலை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அகில விராஜ்

இலங்கையில் முன்னர் இடம்பெற்ற முக்கிய படுகொலைகளான மகேஸ்வரன், லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜூடின் ஆகியர்களது கொலை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

Read more: இலங்கையில் இடம்பெற்ற முக்கிய படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்த மைத்திரிக்கு வலியுறுத்து

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்