சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி 10 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் நடவடிக்கையில் பொது பல சேனா ஈடுபட்டுள்ளது. 

Read more: ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்ட முயற்சி!

“20வது திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அதற்கான உரிமையை பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்கக்கூடாது.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

Read more: 20வது திருத்தச் சட்டத்தை ஏற்பதா, இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

“அரச பயங்கரவாதம், அரச வன்முறை ஆகியவற்றை தோற்கடித்து 2015 ஜனவரி 08ஆம் திகதி பெற்றுக்கொண்ட மாபெரும் மக்கள் ஆணையை, ஒரு சதத்துக்கும் பெறுமதியற்ற இடைக்கால அரசுக்காக விற்க முடியாது.” என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: மாபெரும் மக்கள் ஆணையை ஒரு சதத்துக்கும் பெறுமதியற்ற இடைக்கால அரசுக்காக விற்க முடியாது: சஜித் பிரேமதாச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த ஜனநாயக உரிமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பறித்திருப்பதாக பொது ஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டினார். 

Read more: வடக்கு மக்களுக்கு மஹிந்த பெற்றுக்கொடுத்த உரிமைகளை கூட்டமைப்பு பறித்திருக்கிறது: ஜீ.எல்.பீரிஸ்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுரவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளது போன்று இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால், சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு, தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். 

Read more: இடைக்கால அரசு அமைக்க முற்பட்டால் தனியரசு அமைப்போம்: ஐ.தே.க.

விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

Read more: அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி; யாழ். பல்கலை மாணவர்கள் அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய இடைக்கால அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ளது. 

Read more: மைத்திரி தலைமையில் இடைக்கால அரசாங்கம்; கூட்டு எதிரணி முயற்சி!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.