“இலங்கை பிரஜைகள் அல்லாத வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின் வழக்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாயின், அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவேண்டும். அந்த அரசியலமைப்பு திருத்தமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது கடினமானது. எனவே இலங்கையானது உள்ளகப் பொறிமுறையில் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.” என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
இலங்கை
பொறுப்புக்கூறலில் இலங்கை போதிய அடைவுகளைக் காட்டவில்லை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
“பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இலங்கை போதிய அடைவுகளைக் காட்டவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்முறைகள், மற்றும் ஸ்திரமின்மை என்பன முக்கியமான விடயங்களாகும். இவை தொடர்பில் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஐ.நா. பிரேரணையை திருத்த முயற்சிப்பது பாதகமானது: எம்.ஏ.சுமந்திரன்
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணையே நீதியைப் பெற்றுத்தரும்; கிழக்கில் பேரெழுச்சியோடு போராட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தினால், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் முடங்கின.
ஐ.நா. பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை: விஜயதாச ராஜபக்ஷ
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவில்லை.” என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எந்த விசாரணையையும் எதிர்கொள்வதற்கு தயார்: இராணுவத் தளபதி
“இறுதிப் போரின் போது இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் எந்த தவறையும் செய்யவில்லை. ஆகவே, எவ்வாறான விசாரணையையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
பௌத்தர்களே இலங்கையின் சொந்தக்காரர்கள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்: மனோ கணேசன்
பௌத்தர்களே இலங்கை தீவுக்கு ஒரே சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் ஆட்சியில் இருக்கும் அனைவரிடமும் மேலோங்கி காணப்படுவதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.