“பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இலங்கை போதிய அடைவுகளைக் காட்டவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்முறைகள், மற்றும் ஸ்திரமின்மை என்பன முக்கியமான விடயங்களாகும். இவை தொடர்பில் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். 

Read more: பொறுப்புக்கூறலில் இலங்கை போதிய அடைவுகளைக் காட்டவில்லை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கவில்லை.” என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.நா. பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை: விஜயதாச ராஜபக்ஷ

“இறுதிப் போரின் போது இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் எந்த தவறையும் செய்யவில்லை. ஆகவே, எவ்வாறான விசாரணையையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: எந்த விசாரணையையும் எதிர்கொள்வதற்கு தயார்: இராணுவத் தளபதி

பௌத்தர்களே இலங்கை தீவுக்கு ஒரே சொந்தக்காரர்கள் என்ற எண்ணம் ஆட்சியில் இருக்கும் அனைவரிடமும் மேலோங்கி காணப்படுவதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: பௌத்தர்களே இலங்கையின் சொந்தக்காரர்கள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்: மனோ கணேசன்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கைக்கு எதிரான ஐ.நா. பிரேரணையை திருத்த முயற்சிப்பது பாதகமானது: எம்.ஏ.சுமந்திரன்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தினால், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் முடங்கின. 

Read more: சர்வதேச விசாரணையே நீதியைப் பெற்றுத்தரும்; கிழக்கில் பேரெழுச்சியோடு போராட்டம்!

“இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜெனீவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டவில்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.நா.வில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்