ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாட்சி நடத்த இடம்கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன் முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என்று தேசிய அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 

Read more: அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி முழுமையாக விலக வேண்டும்; பதவி விலகிய அமைச்சர்கள் தெரிவிப்பு!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர். 

Read more: புதிய ஆளுநர்கள் பதவியேற்பு; ரெஜினோல்ட் குரே வடக்கிலிருந்து மத்திய மாகாணத்துக்கு மாற்றம்!

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைகின்ற நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தீர்மானிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பு கூடித் தீர்மானிக்கும்: மாவை சேனாதிராஜா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்திலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர். 

Read more: பிரதமருக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா!

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Read more: அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கான தலைவராக பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தேர்வு!

தேசிய அரசாங்கத்திலிருந்து நேற்று புதன்கிழமை இராஜினாமாச் செய்த அமைச்சர்களுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர். 

Read more: பதவி விலகிய அமைச்சர்களுக்கு பதிலாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்: ராஜித சேனாரத்ன

“அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழரசுக் கட்சி என்னை அழைக்காது; வேறொரு கட்சிக்கூடாக முதலமைச்சர் வேட்பாளராகலாம்: சி.வி.விக்னேஸ்வரன்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்