“புதிய அரசியலமைப்பில் எங்களுக்குப் பெயர்ப்பலகைகள் தேவையில்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இருக்கும் உள்ளடக்கம்தான் தேவை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: பெயர்ப்பலகை வேண்டாம்; அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

தங்கிவாழும் மனநிலையிலிருந்து விடுபட்டு சுய முயற்சியில் எழுந்திருக்க கூடிய தேசத்தை கட்டியெழுப்பும் பேண்தகு அபிவிருத்தி வழிகளில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சுய முயற்சியில் அபிவிருத்தி அடைவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது: மைத்திரிபால சிறிசேன

“எமக்கு தனித்து ஆட்சியமைக்கும் பலமுண்டு. பலவீனமடைந்த நிலையில் தற்போது இருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. அதனால், அவர் தேவையற்று உளறுகிறார்.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

Read more: மைத்திரி உளறுகிறார்; எமக்கு தனித்து ஆட்சியமைக்கும் பலமுண்டு: ஐ.தே.க.

“தொடரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில், இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.” என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கருக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில், இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது. எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை.

காணாமற்போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாது. மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாது. அவர்கள் அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பு அவசியம். அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது மட்டுமன்றி, அது சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது.

தமிழ் மக்கள் கடந்த கால தேர்தல்களில் ஒருமித்த பிரிக்கப்படமுடியாத இலங்கை தீவுக்குள் அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு தமது அங்கிகாரத்தை வழங்கியுள்ளமையையும் மக்களின் இந்த ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படாதன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின் நிமித்தம், இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் தற்போது இலங்கையை விட பன்மடங்கு முன்னேறியுள்ளது. ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும் இலங்கையை பல கோணங்களிலும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள் ஒரு சாதகமான முடிவினை எட்டவேண்டும். அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டிற்கு எதிர்காலம் இல்லை.” என்றுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், “இலங்கை அரசாங்கம் கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தையும் கோரியிருந்தது. ஆகவே இந்த பிரேரணையை முழுமையாக நிறைவேற்றவேண்டிய கட்டாய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதெனத் தெரிவித்தார்.

அத்தோடு, பிரேரணையில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை அங்கத்துவ நாடுகளும் ஐ.நா.மனித உரிமை பேரவையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஒத்துழைப்புடன் செயற்படும் எனவும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன், “காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை“ எனத் தெரிவித்தார்.

அத்துடன், புதிய அரசியல் யாப்பொன்று நிறைவேற்றப்படுவதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களிடையையே அதிகாரப்பகிர்வின் நன்மைகளை எடுத்து சொல்லவேண்டியதன் அவசியம் உள்ளதையும் எடுத்துக் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட பிரதிநிதி, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என உறுதியளித்தார்.

‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? என்ற உண்மையை அறிவதற்காக அவர்களின் குடும்பத்தவர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். எனவே, அது தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துவது இலங்கை அரசின் பொறுப்பாகும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான குழு தெரிவித்துள்ளது. 

Read more: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்: ஐ.நா.

‘இலங்கையின் புதிய அரசியலமைப்பு கனடா உட்பட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.’ என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அதிகாரப் பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு வேண்டும்; கனேடியத் தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன்!

‘தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்படும்’ என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: பௌத்தத்துக்கு முதலிடம் என்பது உறுதிப்படுத்தப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல

More Articles ...

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா நியூயார்க்கில் இன்று விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கிக்சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.