மன்னார் மாவட்டத்திலுள்ள மடுத் திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Read more: மன்னார் மடு திருத்தலப் பகுதி புனிதப் பிரதேசமாக பிரகடனம்!

திறைசேரியின் முழுமையான அனுமதியின்றி அரசாங்கம் மற்றும் அரச துறைச்சார்ந்த நிறுவனங்களுக்கு பணியாளர்களை சேர்த்துக் கொள்வதும், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

Read more: திறைசேரியின் அனுமதியின்றி அரச சேவைக்கு ஆட்களை உள்வாங்குவதற்கு தடை!

வடக்கு- கிழக்கில் 4,981 ஏக்கர் காணி இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் வசம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

Read more: வடக்கு- கிழக்கில், சுமார் 5,000 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

“புதிய தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளை சீர்செய்து மாகாண சபை தேர்தலையும் தொகுதிவாரி தேர்தல் முறையிலே நடத்த வேண்டும். பழைய முறையில் தேர்தல் நடத்துவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது” என்று சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: பழைய முறைக்கு இணங்கோம்; தொகுதிவாரித் தேர்தல் முறை வேண்டும்: நிமால் சிறிபால டி சில்வா

பட்டப் பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேரினது விபரங்களைப் பகிரங்கமாக வெளியிடவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: வெளிநாடு சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்த நடவடிக்கை: விஜயதாச ராஜபக்ஷ

“மாகாண சபையில் அமைச்சராக ஒருவரை நியமிப்பதோ அல்லது பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரிமையாகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மாத்திரமே ஆளுநருக்குரியது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: மாகாண சபையில் அமைச்சர்களை நியமிப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் உரிமையாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து (ஓகஸ்ட்) ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

Read more: வடக்கு- கிழக்கில் 25,000 வீடுகளை உடனடியாக நிர்மாணிக்க விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானம்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.