“எமது ஆட்சியின் போது மக்கள் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றே எதிர்பார்த்தனர். எனினும், எமது அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாமல் போனது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும்.” என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமைக்கான பொறுப்பை மைத்திரியும் ரணிலும் ஏற்க வேண்டும்: அர்ஜூன ரணதுங்க

“இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது.” என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் யுவான் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது; மனோவிடம் சீனத் தூதுவர் தெரிவிப்பு!

“கடந்த சில வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை வடக்குப் பகுதிக்கானது என்ற ரீதியில் எண்ணியிருந்தார்கள். ஆனால், அந்தப் பதவி என்னிடம் வந்ததன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி முழு நாட்டுக்குமானதாக மாறியுள்ளது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கிற்கு என ஒதுக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்னிடம் வந்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

Read more: நல்லாட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

“இரட்டைக் குடியுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். தனிப்பட்ட நபர்களின் உரிமைகளை அமெரிக்காவால் தடுக்க முடியாது.” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: இரட்டைக் குடியுரிமை விடயத்தில் அமெரிக்கா தலையிடாது: கோட்டாபய ராஜபக்ஷ

“இரணைமடுக்குளத்தின் மீது மத்திய அரசின் கழுகுப்பார்வை திரும்பியுள்ளது.” என்று வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

Read more: இரணைமடுக்குளத்தினை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சதித்திட்டம்: பொ.ஐங்கரநேசன்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை முடிவு செய்யவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மைத்திரி இன்னமும் தீர்மானிக்கவில்லை: தயாசிறி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.