“சட்டம், ஒழுங்கு அமைச்சினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே பொறுப்பேற்றுள்ளார். அந்த அமைச்சு விரைவில் முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: சட்டம், ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்: ராஜித சேனாரத்ன

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது மக்களுடைய காணியில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Read more: ஒரு துண்டு காணியைக் கூட கடற்படைக்கு வழங்க முடியாது; முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்ல வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, விசேட குழுவொன்றை அனுப்பவுள்ளது. 

Read more: தமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்!

அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்போவதாக கூறப்பட்டாலும், அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது பொய்: மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு தற்போது (இன்று ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்றது. 

Read more: அமைச்சரவை மறுசீரமைப்பு; சட்டம் ஒழுங்கு பிரதமர் ரணிலிடம், உயர்கல்வி கபீரிடம், இளைஞர் விவகாரம் சாகலவிடம்!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்