இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பௌத்த மத குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரோவுக்கு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Read more: சர்ச்சைக்குரிய பௌத்த குருவுக்கு பிணை

அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச நாடுகளுடன் முன்னெடுத்துவரும் நட்புறவுக் கொள்கையும் நடவடிக்கையும் படையினருக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கும், உள்நாட்டுப் பிரச்சினைகள் பலவற்றுக்கும் தீர்வு காண உறுதுணையாக அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: படையினருக்கு எதிரான குற்றங்களை குறைக்க சர்வதேச நட்பு உதவியது: மைத்திரிபால சிறிசேன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்வதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் ஆதரவளித்தனர் என்று இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். 

Read more: பிரபாகரனைக் கொல்வதற்கு தமிழகத் தலைவர்கள் ஆதரவளித்தனர்: சிவ்சங்கர் மேனன்

இன ரீதியாக சிந்திப்பது தவறு என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இன ரீதியான சிந்திப்பு இல்லை என்றால், சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமம் ஆகிவிடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இன ரீதியான சிந்திப்பு இல்லையெனில், சிறிய இனம் பெரிய இனத்தினுள் கலந்துவிடும்: சி.வி.விக்னேஸ்வரன்

பௌத்த மதத்திற்கு எதிரான தீர்மானம் எதுவும் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படவில்லை. அப்படியிருக்க, வடக்கு மாகாண சபைக்கு எதிராக தென்னிலங்கையில் பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  

Read more: வடக்கு மாகாண சபைக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம்: எம்.ஏ.சுமந்திரன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப் போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: மலையகத் தமிழ் மக்களிடமும் பிரதமர் ரணில் மன்னிப்புக் கோர வேண்டும்: மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வாக அமையாது. ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளனர்.  

Read more: இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வல்ல; தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள்: ரணிலிடம் த.தே.கூ எடுத்துரைப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்