“வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் நாங்கள் எங்களை சிறுபான்மையினர்களாகக் கொள்ளவில்லை. நாம் எமது பிரதேசத்தில் பெரும்பான்மையினர்தான். 1919 தொடக்கம் சிங்களத் தலைவர்கள் இதை ஒப்புக்கொண்டுள்ளர்கள். எனவே, அதிகாரப்பகிர்வுக்கு முழு உரித்தான நாங்கள் இதைக் கோர முடிவதோடு எங்கள் வேலைகளை நாங்களே பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியும்.” என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: அதிகாரப்பகிர்வினை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

தேசிய நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டும் இணையத்தளங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க கலன்சூரிய

நாட்டில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காணாது விட்டுச்செல்ல அது பூதாகாரமாக உருவெடுத்து யுத்தத்தில் முடிந்தது. யுத்தத்தில் பல பெறுமதி மிக்க உயிர்களை இழந்தோம். யுத்தத்தினால் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையின் பிள்ளைகளே. நாட்டின் இறைமையை பாதுக்காக்க போரிட்ட இருதரப்பினரது உயிர்களும் பெறுமதி வாய்ந்தவையே என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: சிறு பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிருந்தால் யுத்தம் மூண்டிருக்காது: மங்கள சமரவீர

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினரும் கடந்த திங்கட்கிழமை முதல் வவுனியாவில் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளான நேற்று வியாழக்கிழமை மாலை, அரசாங்கத்தின் வாக்குறுதிகளை அடுத்து கைவிடப்பட்டது. 

Read more: அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து வவுனியா உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக, கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த பெரியசாமி சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Read more: மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்!

காணாமற்போனவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் கூறியமை தமிழ் மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

Read more: ‘காணாமற்போனவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம்’ என்கிற பிரதமரின் கூற்று ஏமாற்றமளிக்கிறது: சிவஞானம் சிறீதரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரும், உறவினரும் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானது. அதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ‘உண்மையான பதில்’ வழங்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்