பாராளுமன்றத்தில் கடந்த ஒகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் சில அம்சங்களை மாற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஜனாதிபதிக்கு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது. 

Read more: காணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் தலையீடு!

கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் பின்னர், உயிரைக் காப்பாற்றுவதற்காக தப்பியோடி அரசாங்கத்திடம் வந்தவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: கருணா அம்மான், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு புலிகளிடமிருந்து தப்பியோடியவர்: சரத் பொன்சேகா

“கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கைகள் எமக்கு ஏற்புடையதாகும் என்று கூற முடியாது. அதனால்தான் எமது அறிவுசால் உள்ளுர், சர்வதேச நிபுணத்துவப் பெருமக்களை அழைத்து எமக்கென நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க முற்பட்டுள்ளோம்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: கொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்று கூறமுடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, 2017ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் பிரதமராக்குவோம் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) சூளுரைத்துள்ளது. 

Read more: மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டுக்குள் பிரதமராக்குவோம்; கூட்டு எதிரணி சூளுரை!

தன்னினச் சேர்க்கையாளர் சட்டமூலத்தை ஐக்கிய தேசிய கட்சியே அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும், எனினும் நாட்டின் கலாச்சாரத்திற்கு முரண்பாடான சட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்கிற அடிப்படையில் அந்தச் சட்டமூலம் நிராகரிக்கப்படாகவும் பொது நிர்வாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். 

Read more: தன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை!

ஆட்சி அதிகாரத்தைக் கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுத்த போதும், 2020க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும். அதற்கு முன்னர் ஆட்சி அதிகாரம் குறித்து எவருக்கும் நினைத்துப் பார்க்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: 2020 வரை யாரும் ஆட்சி அதிகாரம் குறித்து நினைத்துப் பார்க்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், விளைவுகள் மோசமாகும்: இரா.சம்பந்தன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்