“ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருந்த பத்து வருடத்தில் அவர்கள் புரிந்த அட்டூழியங்களை யாரும் மறந்துவிடாதீர்கள். எனவே, ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் பயணத்தை தொடர்வதற்கு எமது சமூகம் சஜித் பிரேமதாசவிற்கு எமது பெறுமதியான வாக்குகளை வழங்க முன்வர வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்களின் பத்து வருட கால அட்டூழியங்களை மறந்துவிடாதீர்கள்: இரா.சம்பந்தன்

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், மீண்டும் ராஜபக்ஷக்களை ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டாம்: அநுர

“தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்ளவர்களாக இருந்தால், முகத்தை மூடி வரலாம். ஆனால் வாக்களிப்பு நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு முகத்தை திறந்து அடையாளப்படுத்தினால் போதுமானது.” என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். 

Read more: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி வரலாம்; வாக்களிக்கும் போது முகம் காட்ட வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியோடு எமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிப்போம்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: சஜித்தின் வெற்றியோடு எமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிப்போம்: மனோ கணேசன்

“மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்களால் நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகள் தொடர்பில் 17ஆம் திகதி முதல் விசாரணை: ராஜித

“நாங்கள் எவரிடமும் பிச்சை வாங்கத் தயாராக இல்லை. தமிழ் மக்களது கடந்தகால அனுபவங்களை சிந்தித்து, ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். அதி உச்ச அதிகாரப் பகிர்வுடன், எமது மக்கள் கௌரவத்துடன், பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு தீர்வை பெறுவோம். கணிசமான தூரம் பயணித்துள்ளோம். அதிகாரப் பகிர்வைப் பெறக்கூடிய வாசலில் நாங்கள் தற்போது நிற்கின்றோம். ஆகையினால், நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக, ஒருமித்து 98 வீதமான வாக்குகளை அளித்து ஆதரவு வழங்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: யாரிடமும் பிச்சை வாங்கத் தயாரில்லை; அதியுச்ச அதிகாரப் பகிர்வு தீர்வை நாம் பெறுவோம்: இரா.சம்பந்தன்

“எமது ஆட்சிக் காலத்தில் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகம் என்ற பேதமின்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷ ஆட்சியில் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தனர்: ரணில்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்