தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல், மாவீரர் தினத்தினை மக்கள் அனுஷ்டிக்க முடியும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

Read more: புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல் ‘மாவீரர் தினத்தை’ அனுஷ்டிக்க முடியும்: மனோ கணேசன்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் ஒருவரை படுகொலை செய்யப்போகிறோம். எமக்கு ஒத்தாசை வழங்குகிறாயா? என்று இலங்கை புலனாய்வுப் பிரிவோடு இணைந்து இயங்கிய கருணா குழுவினைச் சேர்ந்த பழனிச்சாமி சுரேஷ் என்பவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் இணங்கினேன்.” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ப்ரீதி விராஜ் மனம்பேரி தெரிவித்துள்ளார்.  

Read more: “புலித் தலைவரைப் போடப் போகிறோம், வருகிறாயா?” என கருணா அணி உறுப்பினர் கேட்டார்; ரவிராஜ் கொலைச் சந்தேகநபர் சாட்சியம்!

அச்சு, இலத்திரணியல் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களை கண்காணிப்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

Read more: ஊடகங்களைக் கண்காணிக்க சுயாதீன ஆணைக்குழு அமைக்க அரசாங்கம் முடிவு: கயந்த கருணாதிலக்க

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வடக்கில் கைது செய்யப்படுகின்றவர்களை, அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முன்னிறுத்தாமல், வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில்  ஆஜராக்கும் செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும், சர்வதேச மனிதவுரிமை சட்டத்தினையும், அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்துவது ஏற்புடையதல்ல: நீதிபதி எம்.இளஞ்செழியன்

ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- இஸ்லாமிய இராச்சியம்) தீவிரவாத அமைப்போடு இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை: ராஜித சேனாரத்ன

யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியினுள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை “சுட்டுக் கொல்வோம்” என்று பொலிஸார் அச்சுறுத்தி சென்றுள்ளனர். 

Read more: “சுட்டுக் கொல்வோம்” என்று கூறி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது எழுக தமிழ் பேரணி எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பில் நடத்தப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பூ.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். 

Read more: இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் ஜனவரி மாதம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்