“இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறும் காரணிகளை இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

Read more: சம்பந்தனின் கருத்துக்களை சிங்கள மக்கள் கருத்தில் எடுக்க வேண்டும்: சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணி பகுதியை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு தெரிவித்து, பாதுகாப்பும் அளித்து வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: மருதங்கேணியை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு: எம்.கே.சிவாஜிலிங்கம்

வடக்கு- கிழக்கில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. 

Read more: காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், த.தே.கூ இடையே பேச்சுவார்த்தை!

வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது என்று வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: வாள்வெட்டுக் குழுக்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது: சி.தவராசா

‘ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பு’ என்று பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: சமல் ராஜபக்ஷ

“உண்மைக்கு புறம்பாக என் மீது அவதூறு பரப்பிய போதும், நீதியை நிலைநாட்டுவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: என் மீது அவதூறு பரப்பிய போதும், நீதியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன்: மைத்திரிபால சிறிசேன

நாட்டில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு நாட்டை முன்னேற்றி செல்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் சேர்ந்து பயணிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். 

Read more: சிங்களத் தலைவர்கள் கடும்போக்காளர்களை திருப்திப்படுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர்: இரா.சம்பந்தன்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.