எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள் வட்டமிடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்
‘தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும், வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நாளை தமிழ்த் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியதில் தவறில்லை: மாவை சேனாதிராஜா
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை தமிழ்த் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியதில், ஒரு தவறும் இல்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு சும்மா கூடிக் கலையும் குழுவாக மாறிவிட்டது: மனோ கணேசன்
“புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு சும்மா கூடி கலையும் குழுவாக மாறிவிட்டது. இதுவே இன்றைய உண்மை. இந்த உண்மைக்கு, புறம்பான போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்னால் முடியாது” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்க லே, தமிழ் லே, முஸ்லிம் லே போன்ற இனவாதக் குழுக்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன: மங்கள சமரவீர
நாட்டில் ‘சிங்க லே, தமிழ் லே, முஸ்லிம் லே’ போன்ற இனவாதக் குழுக்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை, எமக்கே உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்
“எமது மாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி பொதுச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்: லக்ஷ்மன் யாப்பா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினைரையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.