பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்த முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி நடத்த முடியாது: ராஜித சேனாரத்ன

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

Read more: ஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து; நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) ஆதரவைப் பெற்றுக்கொண்டமையானது, சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளமையைக் காட்டுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான எந்தக் காரணமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இல்லை என்று அந்தக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கான காரணங்கள் சுதந்திரக் கட்சியிடம் இல்லை: எஸ்.பி.திஸாநாயக்க

நாட்டில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண், கல் மற்றும் மண் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சட்ட விரோத மண், கல் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை: மைத்திரிபால சிறிசேன

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் டுபாயில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது. 

Read more: உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.