ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையான நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை அரசாங்கம் தவறியிருக்கின்ற நிலையில், அதனை செய்விப்பதற்கான மாற்று வழிகளுக்கு அமெரிக்கா தலைமையேற்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Read more: ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு அமெரிக்கா புதிய வழிகளில் வழங்க வேண்டும்: த.தே.கூ

“இலங்கையிலுள்ள தமிழ் மக்களாகிய நாம் தற்போதும் அச்சுறுத்தலுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் கூடாது; ஜெனீவாவில் அனந்தி சசிதரன் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் அபிமானம் குறைந்துவிட்டதாக கூறப்படுவது மாயை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக கூறுவது மாயை: கே.துரைராஜசிங்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பானுக்கான உத்திரயோகப்பூர்வ விஜயத்தில் அவருடன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளில், கலகொட அத்தே ஞானசார தேரர் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Read more: மைத்திரியோடு ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்லவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் முல்லைத்தீவுப் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டு, சில மணி நேரங்களில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Read more: சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை!

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Read more: ஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொண்டு வரப்படவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.