நாட்டின் சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அரபு மொழி பெயர்ப்பலகைகளை நீக்குவதற்கான சுற்று நிருபம் வெளியீடு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், மன்னார் மடு மாதா தேவாலயத்துக்கு வரும் அனைத்துப் பக்தர்களும், நுழைவதற்கு முன் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

Read more: பாதுகாப்புச் சோதனைகளின் பின்னரே மடு மாதா தேவாலயத்துக்குள் நுழைய அனுமதி!

இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கே உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு; மோடியிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

‘கோழைத்தனமான செயல்களால் இலங்கையின் உத்வேகத்தை தோற்கடிக்கமுடியாது. இலங்கையுடன் எப்போதும் இந்தியா தோளாடு தோள் நிற்கும்’ என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையை எவரும் தோற்கடிக்க முடியாது; இலங்கையோடு இந்தியா எப்போதும் துணை நிற்கும்: மோடி

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்று கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. 

Read more: பொறுப்பற்று செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்; ஜே.வி.பி அறிவிப்பு!

அனைத்து பேதங்களையும் மறந்து இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கையராக ஒன்றிணைவோம்: சஜித் பிரேமதாச

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக புதுடில்லி வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார். 

Read more: தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவோம், டில்லி வாருங்கள்; கூட்டமைப்புக்கு மோடி அழைப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்