ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் நேய பயணமொன்றை ஆரம்பிப்பதற்கு மக்களுடன் வீதியில் இறங்கவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: மக்களுடன் இணைந்து ஊழல் மோசடிகளுக்கு எதிராக வீதியில் இறங்கத் தயார்: மைத்திரிபால சிறிசேன

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்படிருந்தால், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

தமிழ் மக்கள், தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம் இன்று தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் பலத்தை த.தே.கூ தவறாக பயன்படுத்துகின்றது: முருகேசு சந்திரகுமார்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது. 

Read more: மத்திய வங்கி பிணைமுறி மோசடி; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆராய ஐ.தே.க. குழு அமைப்பு

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்: லக்ஷ்மன் யாப்பா

“கீரியும் பாம்புமாக இருந்த இருண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் பிரச்சினைகள் இருப்பது இயல்பானது. அதற்காக, கூட்டு அரசாங்கம் கவிழும் என்று யாரும் கனவு காண வேண்டாம்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டு அரசாங்கம் கவிழும் என்று யாரும் கனவு காண வேண்டாம்: ராஜித சேனாரத்ன

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.