“தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் நிரூபிப்பார்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது மீண்டும் நிரூபிக்கப்படும்: இரா.சம்பந்தன்

ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யும் உத்தரவை இரத்துச் செய்து, அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. 

Read more: மைத்திரியின் செயலுக்கு த.தே.கூ கண்டனம்!

“இன்று நடைபெறுகின்ற ஆட்சி எமது சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் நடைபெறுகின்ற ஆட்சியல்ல. எம் மீது திணிக்கப்படுகின்ற ஒரு ஆட்சி. அதனைத் தொடர முடியாது. அது, முடிவுக்கு வர வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: இன்றைய ஆட்சி எம்மீது திணிக்கப்படுகின்ற ஆட்சி; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கடமையில் மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். 

Read more: கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இராணுவ அதிகாரியை மீண்டும் பணியில் சேர்க்குமாறு மைத்திரி பணிப்புரை!

“கூட்டு அரசாங்கத்துக்குள் எங்களது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றால், மக்கள் ஆணை அவசியம்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டு அரசாங்கத்துக்குள் எமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: மனோ கணேசன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவோடு நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் 4000 விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 65,758 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

Read more: உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நிறைவு; பாதுகாப்புப் பணியில் 66,000 பொலிஸார்!

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய, இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அந்தப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

Read more: ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இராணுவ அதிகாரி இடைநிறுத்தம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.