“வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அரச செயற்திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாடு அவசியமானது. அதனை புரிந்து கொண்டு அரச திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் செயற்பட வேண்டும்.” என்று கடற்றொழில் துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: சாள்ஸ் நிர்மலநாதன்
“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை புதன்கிழமை வரவுள்ளார்.
இலங்கையின் நடத்தை குறித்து தெளிவான செய்தியை சர்வதேசத்திற்கு வழங்குவோம்: தமிழ்க் கட்சிகளின் சந்திப்புக்குப் பின் கஜேந்திரகுமார்!
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும், அதன் உறுப்பு நாடுகளுக்கும், ஆணையாளருக்கும் இலங்கையின் நடத்தை தொடர்பில் தெளிவான செய்தியொன்றை சொல்ல வேண்டும் என்கிற இணக்கப்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் வந்துள்ளன.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் கையளித்த ஆவணம் இலங்கையை காப்பாற்றுவதாகவே இருந்தது: சி.வி.விக்னேஸ்வரன்
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் வரும் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் என்னிடம் கையளித்த ஆவணம் இலங்கை அரசினை காப்பாற்றும் நோக்கம் கொண்டது.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்ட’ அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவியுங்கள்: கோட்டாவிடம் மனோ கோரிக்கை!
“ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சுமண தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ள பின்னணியில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலும் அவர் கரிசனை கொள்ள வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை மீற முடியாது: எம்.ஏ.சுமந்திரன்
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசிற்கு சொல்லியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.