“நான் ஜனாதிபதியானதும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நபரையே பிரதமராக நியமிப்பேன்.” என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நபரையே பிரதமராக நியமிப்பேன்: சஜித்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

Read more: சஜித்துக்கே ஆதரவு; த.தே.கூ உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது. 

Read more: சஜித்துக்கு ரெலோவும் ஆதரவு; த.தே.கூவின் அறிக்கை இன்று!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிரூபிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார். 

“அமெரிக்காவில் உள்ள 94 மாவட்ட நீதிமன்றங்களில் எந்த ஒரு நீதிமன்றமும் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டதற்கான அனுமதியை வழங்கவில்லை. அவரும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் அமெரிக்க பிரஜைகளாகவே உள்ளனர்.” என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதித் வேட்பாளராக இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்கப் பிரஜையாகவே உள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தை அவர் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும். அவரின் குடியுரிமை விடயம் தொடர்பில் உண்மையை அறிய நாட்டு மக்கள் அனைவரும் அமெரிக்கத் தூதரகத்தை நாட வேண்டும்.

மக்களுக்கும் மிகவும் கவலைப்பட வேண்டிய விடயம் எம்.சி.சி ஒப்பந்தம் அல்ல. அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் முதன்மை வேட்பாளர்களில் ஒருவரும் அவரது மனைவி மகன் ஆகியோரும் இன்னும் அவரது அமெரிக்க குடியுரிமையையும் கைவிடவில்லை என்பதேயாகும்.

அமெரிக்கக் குடியுரிமையை கைவிடுவதற்கு அந்நாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ள ஒருவர் அமெரிக்க திரைசேறியூடாக தேசிய இழப்பு சான்றிதழை பெற வேண்டும். 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுமார் 1090 பேர் தங்கள் அமெரிக்க குடியுரிமையை சட்டபூர்வமாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், 94 அமெரிக்க மாவட்ட நீதிமன்றங்களில் எதிலும் கோட்டபய ராஜபக்ஷவின் அமெரிக்க கடவுச்சீட்டான டி.எஸ். 4079 இரத்து செய்ய சட்டபூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பில் நாம் சகல மாவட்ட நீதிமன்றங்களிலும் தகவல் திரட்டியுள்ளோம்.” என்றுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் தனி ஈழக் கனவை கைவிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

Read more: புலம்பெயர் தமிழர்கள் ஈழக் கனவை கைவிட்டுவிட்டனர்: சுரேன் ராகவன்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் மெய்பாதுகாவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

Read more: எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

“ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் முடிவுகள் தொடர்பில் இன்று புதன்கிழமை பொது அறிக்கையொன்று வெளியிடப்படும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: சஜித்துக்கு ஆதரவு என்கிற தமிழரசுக் கட்சி நிலைப்பாட்டில் மாற்றமில்லை; த.தே.கூ.வின் நிலைப்பாடு இன்று: சம்பந்தன்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்