2015ஆம் ஆண்டுக்கு முந்தைய ராஜபக்ஷக்களின் கறுப்பு யுகம் மீண்டும் தற்போது ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்களின் கறுப்பு யுகம் மீண்டும் தொடங்கியிருக்கிறது: ஹரீன் பெர்னாண்டோ

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக – தமிழர்களின் பலத்தை மீண்டுமொரு தடவை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாம் உறுதிப்படுத்திக் காட்ட வேண்டும். அதற்காக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை இப்போதிலிருந்தே நாம் ஆரம்பிக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பின் ஊடாக தமிழர் பலத்தை நிரூபிப்போம்: இரா.சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்குக்கு வெளியே சில மாவட்டங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆராய்கிறது. இது ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் எம்மால் ஆராயப்படுகின்ற ஒரு விடயம். இன்னமும் அது தொடர்பில் இறுதி முடிவெடுக்கவில்லை. அவ்வாறு தேர்தலில் நிற்போமாயின் அங்கு ஏற்கனவே போட்டியிடுகின்ற தமிழ்க் கட்சிகளுக்குப் பாதகமில்லாதவாறு போட்டியிடுகின்ற வழிமுறைகள் குறித்து ஆராய்வோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பு வடக்கு- கிழக்குக்கு வெளியே போட்டியிடுவது தொடர்பில் ஆராய்வது உண்மை: எம்.ஏ.சுமந்திரன்

உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்யத் தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். 

Read more: ரஞ்சன் ராமநாயக்க கைது!

“இலங்கையின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது 69 இலட்ச சிங்கள பௌத்த மக்களின் கோரிக்கையாக காணப்படுகின்றது. நாட்டின் தாய் மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.” என்று அமைச்சரவை பேச்சாளரும் உயர்கல்வி அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம்; கோரிக்கை நியாயமானது என்கிறார் பந்துல!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரம் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் அரச சார்பற்ற பிரதிநிதிகளிடம் இருப்பதால், அரசியலமைப்புத் திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலமைப்புத் திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்: விமல் வீரவங்ச

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்