சுவிஸ்லாந்தின் சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எதிரணி தயாராவதாக மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: சுவிஸூக்கு விமானத்தை அனுப்பி நாயைக் கொண்டு வந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக்க எதிரணி முயற்சி: சம்பிக்க ரணவக்க

“அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன் ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமைக்கு அமைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துடன் மாகாண சபை தேர்தல் இடம்பெற வேண்டும்.” என்ற பிரேரணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ளார். 

Read more: எதிர்வரும் மே மாதத்திற்கு முன் மாகாண சபைத் தேர்தல்; அமைச்சரவையில் ஜனாதிபதி பிரேரணை!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி வழங்காத கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்க: மனோ கணேசன்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 ரூபாய் நாள் சம்பளமாக வழங்கக் கோரிய போராட்டங்களின் அழுத்தம் காரணமாக இன்று கையெழுத்திடப்படவிருந்த 700 ரூபாவுக்கான கூட்டு ஒப்பந்தம் தற்காலிகமாக பிற்போடப்பட்டது என முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த போதும், சற்றுமுன்னர் கூட்டு ஒப்பந்தம் இரகியமாக கைசாத்திடப்பட்டுள்ளது. 

Read more: பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கூட்டு ஒப்பந்தம் இரகசியமாக கைச்சாத்து!

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

Read more: ரணில் பொய் கூறுகிறார்; கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்கவில்லை: உதய கம்மன்பில

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயளலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது என்று தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம்; சந்தியா எக்னெலிகொட கடிதம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 

Read more: தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு; மார்ச் மாதத்தில்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்