“உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும். அதற்காக சிறப்பு சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். 

Read more: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம்: மஹிந்த

“வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படும்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்காக எந்தவோர் அர்ப்பணிப்பைச் செய்யவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வை தோற்கடிப்பதற்காக எந்த அர்ப்பணிப்பையும் சுதந்திரக் கட்சி செய்யும்: தயாசிறி ஜயசேகர

“புலனாய்வு தகவல்கள் தொடர்பில் முறையான தொடர்பாடல் இல்லாமையே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த எனக்கே புலனாய்வு தகவல்கள் பகிரப்படவில்லை.” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். 

Read more: புலனாய்வுத் தகவல்கள் முறையாக பகிரப்படாமையே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு காரணம்: ருவான் விஜயவர்த்தன

“என்றைக்குமே எமது மக்களின் விடுதலைக்காக போராடியிராதவர்கள், அதுவும், விடுதலைப் புலிகள் விறகுக் கட்டையால் பயிற்சி கொடுப்பதற்கு அழைத்தபோதுகூட, அதற்குப் பயந்து, பாடசாலைப் பிள்ளைகளை தனக்குப் பதிலாக பயிற்சிக்கு அனுப்பி, அப்பிள்ளைகளை காவு கொடுத்தவர்கள் இந்தச் சபையிலே எனது கருத்துகளை ஜீரணிக்க முடியாமல், வெறும் வாயால் போராளிகளாக ஆக முற்படுகின்றார்கள்.” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

Read more: பயிற்சிக்காக விறகுக் கட்டையைக் கூட தூக்காதவர்கள் போராளியாக முற்படுகிறார்கள்: டக்ளஸ் தேவானந்தா

“நாடு புதிய பயங்கரவாதத்துக்கு முகங்கொடுத்துள்ளது. இது புற்றுநோய் போல, ஒரிடத்துடன் முடிவடைந்துவிடாது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்; ஒரு தாக்குதலுடன் முடிந்துவிடாது: தெரிவுக்குழுவில் ரணில் சாட்சி!

"ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே களமிறங்குவார்." என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதி வேட்பாளராக நானும், பிரதமர் வேட்பாளராக ரணிலும் களமிறங்குவோம்: சஜித் பிரேமதாச

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்