தனிநபர் பிரேரணையாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள, அரசியலமைப்பின் 22வது திருத்தம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்துக்கு பயணிப்பதாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: 22வது திருத்த யோசனையை தோற்கடிக்க வேண்டும்: ஜே.வி.பி

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் சில ஏற்பாடுகளை மாற்றும் விதத்திலும் 15வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, சமர்ப்பித்த 21வது, 22வது திருத்தச் சட்ட பிரேணைகளடங்கிய இரண்டு தனிநபர் பிரேரணைகள் பாராளுமன்றத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. 

Read more: ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் இரு தனிநபர் திருத்தச் சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

வடக்கு மாகாண மக்களின் அடிப்படை தேவையான சகல விதமான விடயங்களிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகம் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இணைப்புப் பாலமாக செயற்படுவேன்: பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தைப்பொங்கல் தினத்துக்கு முன்னதாக கைச்சாத்திடப்படவுள்ளது. 

Read more: விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி; தைப்பொங்கலுக்கு முன்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவதே நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு: மைத்திரி

“வரவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருகின்றது. மலையகத்தில் போட்டியிடும் எண்ணம் ஏதும் எமக்கு இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: கொழும்பு, கம்பஹாவில் போட்டியிடவே ஆலோசனை; மாவை தெரிவிப்பு!

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more: கோட்டாவின் பாராளுமன்ற உரையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை: த.தே.கூ

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்