மத்திய கிழக்கின் அழுத்தங்களுக்கு மத்தியில் அண்மையில் நடந்து முடிந்த ஐ.நா கலாச்சாரப் பிரிவு அமைப்பான யுனெஸ்கோவுக்கான அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் பிரான்ஸின் முன்னால் கலாச்சார அமைச்சர் ஔட்ரே அஷௌலே வெற்றி பெற்றுள்ளார்.

பொருளாதார உளவுப் பிரிவு என்ற அமைப்பு இவ்வருடம் வெளியிட்ட உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நியூடெல்லி 43 ஆவது இடத்திலும் மும்பை 45 ஆவது இடத்திலும் உள்ளன. நாடுகளின் தகவல் தொடர்பு, டிஜிட்டல் வசதி, சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப் பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

மெக்ஸிக்கோவின் நூவா லியோன் மாகாணத்திலுள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மெக்ஸிக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள காயமடைந்த கைதிகளில் 8 பேரின் நிலமை மோசமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 

சோமாலியாவைத் தளமாகச் கொண்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் செயற்பட்டு வரும் அல் ஷபாப் போராளிகள் அந்நாட்டில் தன்னாட்சி மாகாணமாகச் செயற்பட்டு வரும் பண்ட்லந்தில் உள்ள போசாசோ நகரில் போலிசார் மீது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

 தென் சூடானுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கென்யாவின் லொகிக்கோஜியோ என்ற கலப்பு மத்தியதரப் பள்ளி ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ரிஃப்ட் வல்லே பிராந்திய கிரிமினல் விசாரணை அதிகாரி ஜிடோன் கிபுஞ்ஜா கருத்துத் தெரிவிக்கையில் குறித்த துப்பாக்கிதாரிகள் எல்லையைக் கடந்து தென் சூடானில் இருந்து வந்ததாகவும் இது ஒரு பழி வாங்கும் நோக்கத்தினாலான தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் யுத்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக கொரியத் தீபகற்பப் பகுதியில் வானில் பறந்த அமெரிக்கக் குண்டு வீச்சு விமானங்களினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவாம் தளத்தில் இருந்து அமெரிக்காவின் இரு போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய வான்பரப்பில் பறந்ததாகத் தெரிய வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினின் கேத்தலோனியா மாநிலத் தலைநகரான பார்சிலோனா நகரில் கேத்தலோனியா விடுதலையை அங்கீகரிக்க வேண்டாம் என்ற கோரிக்கையின் கீழ் பத்தாயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியிருந்தனர்.

More Articles ...

Most Read