உலகம்
Typography

மன்ஹாட்டனில் தனது மனைவியுடன் வசித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்பின் வீட்டுக்கு நேற்று திங்கட்கிழமை வந்த மர்ம பார்சலில் இருந்த வெண்ணிறப் பொடியை முகர்ந்ததால் மயக்கமான அவரின் மனைவியும் டிரம்பின் மருமகளுமான வெனிசா மயக்கமடைந்துள்ளார்.

இதனால் அவர் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இப்பொடியால் பாதிக்கப் பட்ட டிரம்பின் மருமகள் வெனிசா மற்றும் அவரது தாயார் ஆகியோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டதுடன் தற்போது இவர்கள் நலமுடன் இருப்பதாகவும் ஜூனியர் டிரம்ப் டுவீட் செய்துள்ளார். தற்போது இப்பார்சலை அனுப்பியவர்கள் யார் என்ன நோக்கத்துக்காக அனுப்பியுள்ளார்கள் போன்றவற்றை அறிய தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளுக்கு ஆந்த்ராக்ஸ் என்ற மோசமான வைரஸ் அடங்கிய பொடிகளை பார்சல்களில் தீவிரவாதிகள் அனுப்பியது கண்டு பிடிக்கப் பட்டது. முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் எம் பிக்களை கொலை செய்யும் நோக்கில் இவை அனுப்பப் பட்டதால் இந்த மர்ம பார்சல்கள் தொடர்பில் அமெரிக்க அரசு தொடர்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

நியூயோர்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் தனது மனைவி வெனிசாவுடன் வாழ்ந்து வரும் ஜூனியர் டிரம்ப் அதிபர் டிரம்பின் செய்தித் தொடர்பாளராகச் செயற்பட்டு வருவதுடன் அவரின் சில அரசியல் பணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு நேற்று வந்த மர்ம பொடியைச் சோதனை செய்து பார்த்ததில் அது அபாயகரமற்றது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் இது வெறுப்புக்கு இடமான செயல் எனவும் தமது எதிர்ப்பை இவ்வாறு அச்சுறுத்தும் நோக்கில் எவரும் வெளிப்படுத்தக் கூடாது என்றும் அவ்வாறு செயற்படுபவர்களை மன்னிக்க முடியாது எனவும் டிரம்பின் மகனான ஜூனியர் டிரம்ப் மற்றும் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்