உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை இரவு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் பிரேசிலின் தலைநகர் ரியோ டீ ஜெனீரோவில் பத்திரிகையாளர் சென்று கொண்டிருந்த பேருந்து  ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பெண்களுக்கான கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்ற டெயோடோரோ இலிருந்து ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்ற இந்த பேருந்தின் மீது சுடப் பட்ட வேட்டுக்களால் இரு யன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளன. இத்தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படாத போதும்  துருக்கி நாட்டைச் சேர்ந்த தன்னார்வ ஊழியர் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. சிலவேளை பேருந்தை நோக்கி கற்கள் வீசப் பட்டிருக்கலாம் எனவும் இரு ஊடகவியலாளர்கள் காயம் அடைந்திருக்கலாம் எனவும் ராய்ட்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பேருந்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப் பட்டு பயணிகள் யாவரும் பதற்றத்துடன் கீழே இறங்கிய போதும் பஸ் ஓட்டுனர் போலிசாரைக் காணும் வரை பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் போலிஸ் தரப்பில் இத்தாக்குதல் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. இத்தாக்குதல் சம்பவம் ரியோவைக் குறி வைத்து இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாகும். கடந்த வாரம் சைக்கிள் ஓட்டப் போட்டிகளின் போது வெடிகுண்டு கண்டு பிடிக்கப் பட்டு அகற்றப் பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS